ஆம்புலன்ஸை மறித்து தகராறு செய்த இளைஞர்; 30 நிமிடம் உயிருக்கு போராடி பரிதாபமாக பலியான நோயாளி.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!



Uttar Pradesh heart Attack Patient Died in Ambulance Man Argue and Stop Vehicle

 

அவசர ஊர்தியை இடைமறித்து செய்த தகராறில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நோயாளி மேற்படி சிகிச்சைக்கு செல்ல வழியின்றி பரிதாபமாக துள்ளத்துடிக்க உயிரிழந்தார்.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சீதாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ் சந்திரா. இவர் நேற்று வீட்டில் இருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனால் பதறிப்போன குடும்பத்தினர், அவரை மீட்டு லக்னோ அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். மருத்துவர்கள் அவரை சோதனை செய்துவிட்டு, மாரடைப்பு தீவிரமாக இருப்பதால் முதலுதவி சிகிச்சை அளித்து மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நோயாளியான சுரேஷ் சந்திரா மருத்துவமனையில் இருக்கும் அவசர ஊர்தியில் ஏற்றப்பட்ட நிலையில், அவசர ஊர்தி செல்லும் வழியை மறித்து உமேஷ் மிஸ்ரா என்பவர் தனது காரை இடைநிறுத்தி தகராறு செய்துள்ளார்.

சுமார் 30 நிமிடங்கள் உயிருக்கு போராடிய சுரேஷ் சந்திரா அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பந்தப்பட்ட உமேஷ் மிஸ்ரா பாஜக தலைவர் ராம்கிர் பாண்டேவின் சகோதரர் என்று கூறப்படும் நிலையில், பாஜக தலைவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.