மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கியாஸ் சிலிண்டரில் உள்ள பித்தளையை அகற்றியபோது பயங்கரம்; வெடித்து சிதறியதால் தாய்-மகள் 3 பேர் பலி, 4 பேர் படுகாயம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜலூன் மாவட்டம், கன்ஷிராம் காலனி பகுதியில் நேற்று சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. குடியிருப்பு பகுதியில் நடந்த விபத்தால், வீட்டில் இருந்த 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
தாய் - மகள்களான 2 குழந்தைகள் உட்பட 3 பேர் சிலிண்டர் வெடிப்பில் பலியான நிலையில், 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
சிலிண்டர் வெடிப்புக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, பழைய இரும்பு வியாபாரி சிலிண்டரில் உள்ள பித்தளையை அகற்ற முயற்சித்த போது, கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து நடந்தது உறுதியானது.