மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
60ல் 30 ஆக வேண்டுமா? ஆசையை தூண்டி இலட்சக்கணக்கில் மோசடி.. மக்களே உஷார்.!
வயதான உங்களை 30 ஆண்டுகள் இளமையை குறைக்கிறோம் என தம்பதி மோசடி செயலில் ஈடுபட்டுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் பகுதியை சேர்ந்த தம்பதி பூந்தி - பாப்லி. இவர்கள் இருவரும் 'ரிவைவல் வேர்ல்ட்' என்ற பெயரில் சிகிச்சை மையம் ஒன்றை நடத்தி இருக்கின்றனர். அதாவது, 60 வயதுள்ள நபர்களை குறிவைத்து, அவர்களை இளமையாக்குவதாக கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரம்.. லாரி மோதியதில் 10 பேர் பலி.! கோர விபத்து.!
இளமையாக்குவதாக மோசடி
தங்களிடம் அதற்கான மெஷின் ஒன்று இருப்பதாகவும், இஸ்ரேலில் அமெரிக்கா தயாரித்த பிரத்தியேக இயந்திரம் கொண்டு உங்களை இளமைப்படுத்த முடியும் எனவும் பேசியே மக்களை நம்ப வைத்துள்ளனர். இவர்களின் வலையில் விழுந்தோரிடம் ரூ.90 ஆயிரம் முதல் சில இலட்சங்கள் வரை பணம் பெற்றுள்ளனர்.
காவல்துறை விசாரணை
முதலில் இயந்திர சிகிச்சைக்கு முன்னர் பல்வேறு சிகிச்சை பெற வேண்டும் என நூதனமாக ஏமாற்றி பணம் பறிப்பு செயலில் ஈடுபட்ட தம்பதியின் மீது காலப்போக்கில் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு உண்மை அம்பலமாகியுள்ளது. மேலும், மக்களின் உணர்ச்சியுடன் விளையாடி பணம் சம்பாதித்து இருக்கின்றனர். தற்போது தம்பதிக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: மகள் பாலியல் வழக்கில் சிக்கியதாக சைபர் மோசடி முயற்சி; ஆசிரியை மாரடைப்பால் மரணம்..!
இந்த கும்பல் மொத்தமாக சுமார் ரூ.35 கோடி அளவில் மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.