திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பாஜக-வின் வெற்றியை கொண்டாடிய முஸ்லீம் இளைஞர் அடித்தே கொலை.. பேரதிர்ச்சி சம்பவம்.. மாண்டுபோன மனிதம்.!
குஷிநகரில் பாஜகவின் வெற்றியை சிறப்பித்த முஸ்லீம் இளைஞர், தனது உறவினர்களால் அடித்தே கொலை செய்யப்பட்ட பதைபதைப்பு சம்பவம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள குஷிநகர் மாவட்டம், ராம்கோலாவை அடுத்துள்ள கத்கர்ஹி கிராமத்தை சேர்ந்த இளைஞர் பாபர் அலி. இவர் தீவிர பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர் ஆவார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், அம்மாநிலத்தில் பாஜக அமோக வெற்றி அடைந்து ஆட்சியை தக்கவைத்து. இந்த வெற்றிகொண்டாட்டம் பாஜக தொண்டர்களால் மாநிலம் முழுவதும் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பாஜக ஆதரவாளரான பாபர் அலியும், தனது வீட்டருகே இனிப்புகளை விநியோகம் செய்துகொண்டு இருந்துள்ளார். பாபர் அலியின் செயல்பாட்டுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த பக்கத்து வீட்டு முஸ்லீம் இளைஞர்களான ஆரிப் மற்றும் தாஹிர் உட்பட 5 பேர் கும்பல், பாபரை கடுமையாக தாக்கி இருக்கிறது. மேலும், அவரை வீட்டின் மேல்தளத்தில் இருந்து கீழே தள்ளவிட்டு இருக்கின்றனர்.
இதனால் படுகாயமடைந்து உயிருக்கு போராடியவரை, பாபர் அலியின் குடும்பத்தினர் மீட்டு கடந்த 21 ஆம் தேதி லக்னோ அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வந்த பாபர் அலி, மார்ச் 25 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக கடந்த 22 ஆம் தேதியே பாபர் அலியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், பாபர் அலியை கொலை செய்ய முயற்சித்ததாக வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், ஆரிப் மற்றும் தாஹிரை கைது செய்தனர். தற்போது பாபர் அலி உயிரிழந்துவிட்டதால், இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், குற்ற செயலில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள நபர்களுக்கு வலைவீசப்பட்டுள்ளது. உயிரிழந்த பாபர் அலியின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய உள்ளூரில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், காவல் துறையினர் பாதுகாப்பு போடப்பட்டு நீண்ட போராட்டத்திற்கு பின்னர் நேற்று உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.