மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#ShockingVideo: மணமேடையில் 21 வயது புதுமணப்பெண் மாரடைப்பால் மரணம்.. நொடியில் நடந்த துயரம்.. அதிர்ந்துபோன குடும்பத்தினர்.!
21 வயது இளம்பெண் தனது திருமண மேடையிலேயே மாரடைப்பால் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து புதிய வாழ்க்கையை தொடங்கவேண்டிய தருணத்தில் நடந்த கண்ணீர் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ, பத்வானா கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்பால் சர்மா. இவரின் மகள் ஷிவாங்கி ஷர்மா (வயது 21). அங்குள்ள புத்தேஸ்வர் மொஹலா பகுதியை சேர்ந்தவர் விவேக்.
ஷிவாங்கி ஷர்மாவுக்கும் - விவேக்கிற்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது மணமக்கள் மாலை மாற்றும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
அப்போது, ஷிவாங்கி ஷர்மா திடீரென தன்னிலை மறந்து இருக்கையில் அமர்ந்தவாறு மயங்கி இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த இருதரப்பு குடும்பத்தினரும், அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
அங்கு ஷிவாங்கியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் என்பதை உறுதி செய்துள்ளனர். இதனையறிந்த குடும்பத்தினர் பெரும் சோகத்திற்கு உள்ளாகினர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், ஷிவாங்கி ஷர்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தது தெரியவந்தது. ஷிவாங்கி சர்மா மயங்குவதற்கு முன்பு திருமண மண்டபத்தில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
#लखनऊ कोरोना काल के बाद से हार्ट अटैक की घटना बढ़ी☑️वरमाला के बाद हार्ट अटैक से हुई दुल्हन की मौत☑️बुद्धेश्वर से मलिहाबाद पहुंची थी बारात☑️हॉस्पिटल ले जाने पर डॉक्टर ने दुल्हन को किया मृत घोषित☑️ @DrVNMishraa जी निवेदन है इससे बचाव के उपाय बताए☑️ #Lucknow #heartattack pic.twitter.com/1xzVaKaePA
— GoyalExpress (@ExpressGoyal) December 4, 2022