மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
16 வயது சிறுமி இளைஞரால் பாலியல் பலாத்காரம்; கல்லூரி மாணவராக நடித்து காதல் வலைவீசி நடந்த பயங்கரம்.!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவை சார்ந்தவர் ஆகாஷ் குப்தா (வயது 21). இவர் பத்தாம் வகுப்பு மட்டுமே பயின்றுவிட்டு, மேற்படி படிக்காத நிலையில், தன்னை கல்லூரி மாணவராக அறிமுகம் செய்து பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு காதல் வலை வீசியிருக்கிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் அறிமுகமான 16 வயது சிறுமியை அவர் கடத்திச் சென்றதாக கூறப்படும் நிலையில், பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்த நிலையில், விசாரணையில் பெண்களை குறி வைத்து சமூக வலைதளம் மூலமாகவும், நேரிலும் பேசி அவர்களை மயக்கும் திறன் கொண்ட இளைஞரின் செயல் அம்பலமானது.
சம்பவத்தன்று 16 வயது சிறுமியுடன் அறிமுகத்தை ஏற்படுத்தியுள்ள இளைஞர், அவரை தனியாக பார்க்க வேண்டும் என வற்புறுத்தி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனை விடியோவும் எடுத்து வைத்துள்ளார்.
இதனால் மனமுடைந்துபோன மாணவி தனது தந்தையிடம் விபரத்தை தெரிவிக்கவே, அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் கயவன் கைது செய்யப்பட்டான். தற்போது இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.