மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேலை கிடைக்கலைனா சான்றிதழால் என்ன பயன்? - தீ வைத்து கொளுத்தி 24 வயது இளைஞர் தற்கொலை.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ மாவட்டம், கண்ணுஜ் பகுதியில் வசித்து வருபவர் பிரஜிப்பால் (வயது 24) . இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார்.
சமீபத்தில் அம்மாநிலத்தில் நடைபெற்ற காவல்துறை தேர்விலும் கலந்துகொண்ட நிலையில், அவர் வெற்றியடையவில்லை. சரியான வேலையும் கிடைக்காமல் கடுமையாக மனஉளைச்சலை சந்தித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று தனது வீட்டில் ப்ரஜிபாஸ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் தற்கொலை கடிதத்தில், வேலை கிடைக்காததன் காரணமாக ஏற்பட்ட மனவிரக்தியில் தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்கொலை செய்வதற்கு முன்பு தனது படிப்பு சான்றிதழையும் தீ வைத்து கொளுத்தி இருக்கிறார். அவரின் கடிதத்தில், "வேலை கிடைக்காத பட்சத்தில் டிகிரி வாங்கி பயன் என்ன?. என் வாழ்நாளில் பாதி ஆண்டுகளை படிப்புக்காக செலவிட்டேன். வேலை கிடைக்காததால் தற்கொலை செய்கிறேன்" என கூறியுள்ளார்.