மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
17 வயதில் பலாத்காரம், 29 வயதில் புகார்.. சாமியார் மீது பரபரப்பு குற்றச்சாட்டு.. போலிச்சாமியாரால் நடந்த பகீர் சம்பவம்.!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா விருந்தாவனம் பகுதியில் வசித்து வருபவர் கோவிந்த் வல்லபாய் சாஸ்திரி. இவர் அப்பகுதியில் தன்னை கடவுள் என்று கூறி சுற்றி வருபவர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 09, 2011 ஆம் ஆண்டு 17 வயதுடைய சிறுமி ஒருவரை அவரது ஆசிரமத்திற்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி, சாஸ்திரிக்கு எதிராக புகார் அளிக்க போவதாக கூறியுள்ளார்.
இதனால் பதறிப்போன கோவிந்த் சாஸ்திரி, நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். ஆன்மீக சொற்பொழிவாளராக உன்னை உருவாக்குகிறேன் என்று பல வாக்குறுதி கொடுத்து பெண்ணை தடுத்து இருக்கிறார்.
தன்னை சாஸ்திரி திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் பெண்மணியும் அப்படியே இருந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு மீண்டும் அந்தப் பெண்மணிக்கு தொடர்பு கொண்ட கயவன், டிசம்பர் எட்டாம் தேதி தனது வீட்டிற்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அப்போதும் திருமணம் தொடர்பாக வாக்குறுதி அளித்த நிலையில், ஆண்டுகள் கடந்தும் திருமணம் என்பது நடைபெறவில்லை. பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு தற்போது 29 வயதாகும் நிலையில், அவர் பிருந்தாவனம் காவல் நிலையத்தில் சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், விசாரணை நடத்தி கோவிந்த் வல்லபாய் சாஸ்திரியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.