திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இன்ஸ்ட்டா, பேஸ்புக்கில் மூழ்கிக்கிடந்த மகள்.. தாய் கண்டித்ததால் 15 வயது சிறுமி கடிதம் எழுதி விபரீத முடிவு..!
முகநூல், இன்ஸ்டாகிராம் உபயோகம் செய்ய தாய் கண்டனம் தெரிவித்ததால், 8 ஆம் வகுப்பு பயின்று வரும் மகள் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட், லால்குருதி காசெருகேடா பகுதியை சார்ந்தவர் நீது. இவர் தனது இரண்டாவது கணவர் ராகுல் என்பவருடன் கடந்த 5 வருடமாக வசித்து வருகிறார். நீதுவின் முதல் கணவருக்கு பிறந்த பெண்பிள்ளை காஷிஷ் (வயது 15). காஷிஷ் அங்குள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமி முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலில் கணக்கு வைத்திருந்ததாக தெரியவருகிறது.
மேலும், நீண்ட நேரம் அதனை உபயோகம் செய்து படிப்பில் நாட்டம் செலுத்தாமல் இருந்ததால், இதனைகவனித்த சிறுமியின் தாயார் மகளை கண்டித்து இருக்கிறார். கடத்த டிச. 28 ஆம் தேதியும் மகளை தாய் இதுதொடர்பாக கண்டித்து இருந்த நிலையில், மனமுடைந்துபோன சிறுமி இரவு 7 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக லால்குருதி காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுமி எழுதிய கடிதமும் கைப்பற்றப்பட்ட நிலையில், "தனது தாய் முகநூல், இன்ஸ்டாகிராம் உபயோகம் செய்ய அனுமதிக்காத காரணத்தால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், காஷிஷின் தந்தையான சதீஷ் காவல் நிலையத்தில் அளித்த புகார் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.