திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மனைவியை தரக்குறைவாக பேசிய உறவினர் சுட்டுக்கொலை: வாக்குவாதம் முற்றியதால் பயங்கரம்.!
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட், பாபர் கிராமத்தை சேர்ந்தவர் வினீத் என்ற ராணு. இவர் தனியார் தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரின் உறவினர் மோகித் என்ற மெஹகி.
சம்பவத்தன்று வினீத், தனது சொந்த கிராமத்திற்கு பிரச்சனை தொடர்பாக சென்றுள்ளார். அச்சமயம், மோகித் - வினீத் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மோகித்தின் மனைவி குறித்து வினீத் அவதூறாக பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற மோகித், தனது துப்பாக்கியை எடுத்து வினீத்தை சுட்டுக்கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், வினீத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இத்தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், மோகித்தை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரப்பையும் ஏற்படுத்தியது.