திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காதல் வயப்பட்ட சிறுமி ஆணவக்கொலை; காதலருடன் வாக்கிங் சென்றபோது நடந்த பயங்கரம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட், வான்பூர், சிலோரா கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாட்டுச்சாணத்தில் இளம்பெண்ணின் சடலம் அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட இளம்பெண் திஷா (21) என அடையாளம் காணப்பட்டார்.
சிறுமி அங்குள்ள வேறொரு கிராமத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு வரும்போது, நிஷாவின் மாமா இருவரையும் கண்டுபிடித்துவிட்டார்.
இதனையடுத்து, சிறுமியை தான் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு செல்வதாக தன்னுடன் அழைத்துக்கொண்டு புறப்பட்டவர், வழியில் காதல் வயப்பட்ட பெண்ணை கொலை செய்து உடலை எரித்து தப்பிச்சென்றுள்ளார்.
விசாரணையில் உண்மையை அறிந்த காவல் துறையினர், அவரின் மாமா
சோனு என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.