மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கூலிப்படை ஏவி கணவன் சுட்டுக்கொலை: கள்ளத்தொடர்பால் சமாதி கட்டிய மனைவி..!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியைச் சார்ந்தவர் அருண். இவரது மனைவி அர்ச்சனா. தம்பதிகள் இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், அர்ச்சனாவுக்கு சௌரவ் தாகூர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கள்ளக்காதல் செய்ததை தொடர்ந்து, அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும் இருந்த வந்துள்ளனர்.
சம்பவத்தன்று தனது மாமனார் வீட்டிற்கு சென்று மீண்டும் வரும்போது இருவர் கும்பல் வழிபறியில் ஈடுபட முயற்சித்த நிலையில், அருண் அதனை எதிர்த்ததால் அவரை சுட்டுக்கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், முடிவில் அதிர்ச்சி தகவல் காத்திருந்துள்ளது. அதாவது அவரது மனைவி அர்ச்சனாவும், கள்ளக்காதலன் தாகூரும் சேர்ந்து கூலிப்படை ஏவி அருணை கொலை செய்தது அம்பலமானது.