திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அனுதினமும் தீராத தொல்லை கொடுத்த இளைஞர்: விபரீத முடிவெடுத்த 15 வயது சிறுமி..!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில், சிறுமியை அதே பகுதியை சேர்ந்த மோனு ராய்தாஸ் என்ற 20 வயதுடைய இளைஞர், எப்போதும் பின்தொர்ந்து தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருகட்டத்தில் மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலைக்கு முன்பு ராய்தாசின் செயல்பாடுகள் குறித்தும் எழுதி வைத்துள்ளார்.
சிறுமியின் தற்கொலை குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், அவர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் ராய்தாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.