மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓடும் இரயிலில் இளம்பெண்ணை கற்பழித்த இரயில்வே பணியாளர்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
இளம்பெண்ணை ஓடும் இரயிலில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த இரயில்வே பணியாளர் கைது செய்யப்பட்டார்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மொராதாபாத் இரயில் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் நபர், ஓடும் இரயிலில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி இரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இரயில்வே பணியாளரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து மொராதாபாத் இரயில் நிலைய தலைமை காவல் பொறுப்பாளர் சுதீர் குமார் தெரிவிக்கையில், "இளம்பெண் இரயில்வே பணியாளரால் பலாத்காரம் செய்யப்பட்டதாக வழங்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடந்தது.
விசாரணையில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியாகவே, இரயில்வே பணியாளருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரயில்வே பயணத்தில் பாதுகாப்பை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என கூறினார்.