திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அண்ணியை பலாத்காரம் செய்த கொழுந்தன்; மனைவியை விட்டுக்கொடுத்த புருஷன்.. பதறவைக்கும் சம்பவம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாபர்நகர் பகுதியை சேர்ந்த பெண்மணிக்கு திருமணம் முடிந்து, தனது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
கடந்த ஏப்ரல் 2ம் தேதி பெண்மணி வீட்டில் இருந்துள்ளார். அவரின் கணவர் வெளியே சென்ற சமயத்தில், வீட்டில் இருந்த அவரின் தம்பி தனது அண்ணியை வலுக்கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
வீட்டிற்கு கணவர் வந்ததும் தனக்கு நேர்ந்த துயரத்தை கண்ணீருடன் பெண்மணி விவரித்து இருக்கிறார். இதனைக்கேட்ட கணவர் மனைவிக்கு ஆதரவாக இருக்காமல், அதிர்ச்சிதரும் தகவலை தந்துள்ளார்.
அதாவது எனது சகோதரரால் நீ பலாத்காரம் செய்யப்பட்டதால், இனி நீ அவனின் மனைவி. எனக்கு நீ கொழுந்தியாள் என்று கூறி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி கணவரிடம் நியாயம் கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளிக்க மறுத்த கணவர், வீட்டின் அறையில் அவரை அடைத்து வைத்துள்ளார். ஒருகட்டத்தில் பெண்ணை அவர் கொலை செய்யவும் முயற்சித்து இருக்கிறார்.
இவர்களின் பிடியில் இருந்து தப்பித்த பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.