மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாட்சப் தகராறில் பெண் மீது இளைஞர் தாக்குதல்: பாய் பெஸ்டிகளை அழைத்து சுளுக்கெடுத்த மாணவி.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா, அமிட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவர், அதே கல்லூரியில் பயின்று வரும் பெண்ணிடம் நட்பாக பழகி வந்ததாக தெரியவருகிறது.
இருவரும் வாட்ஸப்பில் உரையாடிக்கொண்ட நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவியை நேரில் சந்தித்த மாணவர், அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதில், ஆத்திரம் முற்றியதில் இருவருக்குள்ளும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர் மாணவியை தாக்கவே, அவருடன் இருந்த மற்றொரு மாணவி மாணவனை தாக்கினார். இதனால் அங்கு பரபரப்பு சூழல் உருவாகியது.
Part 2
— Rana (@Pranjo3) October 1, 2023
Context :- A girl and boy gets into altercation at amity over some whatsapp chat and the girl slaps the boy and gets returned with a slap and punch. After which, she calls her male friends to beat up the guy pic.twitter.com/lEeXRvUJLm
இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவி தனது ஆண் நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கவே, விரைந்து வந்தவர்கள் இளைஞனை நடுரோட்டில் வைத்து கடுமையாக தாக்கினர். இதுகுறித்த அதிர்ச்சி காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.