பள்ளிக்கு சென்ற சிறுமியை முட்டிதூக்கிய மாடு: அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!



Uttar Pradesh Noida Minor Girl Attack by Bull 

 

குழந்தைகள் எப்போதும் வழக்கமாக பயணிக்கும் வழிதான் பள்ளி செல்கிறார்கள் என அலட்சியமாக அவர்களை அனுப்பி வைக்கும் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா, தாத்ரி பகுதியில் கடந்த சில நாட்களாகவே தெருக்களில் கைவிடப்பட்ட நிலையில் மாடுகள் சுற்றி வருவது தொடர்ந்துள்ளது. 

இதனால் மக்கள் அச்சத்தின் மத்தியிலேயே வீதியில் பயணிக்கும் சூழ்நிலை உருவானது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சகோதரியுடன் பள்ளிக்கு சென்றுகொண்டு இருந்த சிறுமியை மாடு தாக்கியது. 

தனது கொம்புகளால் மாடு அசைந்தபோது, சிறுமி மேலே தூக்கப்பட்டு பின் கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் சிறுமியை உடனடியாக மீட்டனர். இந்த பதைபதைப்பு சம்பவத்தின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.