தொடர் வழிப்பறி.. 6 பேர் கும்பல் கைது.. 105 செல்போன்கள் பறிமுதல்..! அதிரடி காட்டிய காவல்துறை.!



Uttar Pradesh Noida Police Arrest 6 Man Robbery Team Recovered 105 Snatched Mobiles

பொதுமக்களிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த 6 பேர் கும்பல் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் வழிப்பறி கொள்ளையர்கள் பொதுமக்களின் அலைபேசியை பறித்து செல்லும் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வந்தது. இந்த விஷயம் தொடர்பாக உள்ளூர் காவல் நிலையங்களில் பல்வேறு புகார்கள் பெறப்பட்டன. 

இதனையடுத்து, நொய்டா காவல் துறையினர் தனிப்படை அமைத்து செல்போன் பறிப்பில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். தனிப்படை காவல் துறையினரின் விசாரணைக்கு பின்னர், பல்வேறு சி.சி.டி.வி கேமிரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட 6 இளைஞர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். 

Uttar pradesh

இவர்களிடம் நடந்த விசாரணையில், இந்த 6 பேர் கும்பல் தனித்தனியாக சென்று டெல்லி புறநகர் மற்றும் நொய்டாவின் வெவ்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும், பின்னர், ஒரே அணியாக திரண்டு விற்பனை செய்து வருமானம் பார்த்து வந்ததும் அம்பலமானது. 

இவர்கள் 6 பேரிடம் இருந்து 105 மொபைல்கள் மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புகார்களின் பேரில் தற்போது வரை 40 மொபைல்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.