மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வலை வீசி தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி என்கவுன்டர்... காவல்துறை அதிரடி நடவடிக்கை.!
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் ஒரு லட்ச ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட குற்றவாளி காவல்துறையால் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்திர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் முதலமைச்சரான பிறகு குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 185 குற்றவாளிகள் என்கவுண்டர் மூலம் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் குப்ரான் என்ற குற்றவாளி காவல்துறையால் தீவிரமாக தேடப்பட்டு வந்தார். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, வழிப்பறி, போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட 13 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவரை பற்றிய தகவல் தருபவர்களுக்கு சன்மானமாக ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் எனவும் உத்தர பிரதேச அரசு அறிவித்திருந்தது.
இந்த சூழ்நிலையில் உத்திர பிரதேசம் மாநிலத்தின் கெளஷம்பி என்ற இடத்தில் குப்ரான் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவரை சுற்றி வளைத்த போலீசார் கைது செய்யும் முயற்சித்தனர். அப்போது குப்ரான் காவலர்களை நோக்கி சுட்டதால் காவல்துறையினர் தங்களை தற்காத்துக் கொள்ள திருப்பி சுட்டதில் குப்ரான் படுகாயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குப்ரான் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.