மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செலவுக்கு ரூ.500 பணம் கொடுக்க மறுத்த தந்தை கொடூர கொலை: மகன் வெறிச்செயல்.!
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலி பகுதியை சேர்ந்தவர் த்ரிலோகி. இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவரின் மகன் சஞ்சய் (வயது 25). சம்பவத்தன்று சஞ்சய் தனது தந்தையிடம் இருந்து செலவுக்கு ரூ.500 பணம் கேட்டுள்ளார். தந்தையோ தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் தனது செலவுக்கு பணம் தரவேண்டி தந்தையிடம் பிரச்சனை செய்ய, இருதரப்பு வாக்குவாதம் நடந்துள்ளது.
இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சஞ்சய், தனது தந்தையை கொலை செய்தார். இந்த சம்பவம் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி நடைபெற்றது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், அவரின் திரிலோகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய அதிகாரிகள், தலைமறைவான சஞ்சயை நேற்று முன்தினம் கைது செய்தனர்.