ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
சொத்து தகராறில் பயங்கரம்; 5 பேரை ஈவு இரக்கமின்றி கொன்று நாடகம்.. பதறவைக்கும் தகவல் உள்ளே.!
சொத்துக்காக சொந்த சகோதரரின் குடும்பத்தை கொலை செய்து, நல்லவன் போல நாடகமாடிய நபரின் அதிர்ச்சி செயல் பதறவைத்துள்ளது. மகிழ்ச்சியாக வாழ்ந்த குடும்பத்தை திரைப்பட பாணியில் கொலை செய்து நாடகமாடிய சகோதரரின் அதிர்ச்சி செயல் குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
அழகிய குடும்பம்
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சீதாப்பூர் மாவட்டம், பல்ஹாபூர் கிராமத்தை சேர்ந்தவர் அனுராக் சிங் (வயது 45). இவரின் மனைவி பிரியங்கா சிங் (40). தம்பதிகளுக்கு அஸ்வி (12), அருணா (8) என்ற மகள்களும், ஆத்விக் (4) என்ற மகனும் என 3 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுடன் அனுராக்கின் தாயார் சாவித்ரி (62) வசித்து வருகிறார்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் காதலி கண்முன்னே துள்ளத்துடிக்க இளைஞருக்கு கொடூரம்.. சென்னையில் பயங்கரம்.!
குடும்பத்தினர் கொடூர கொலை
கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுராக் தனது மனைவி, 2 குழந்தைகள், தாயார் ஆகியோரை கொடூரமாக கொலை செய்ததாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அம்மாவை சுட்டுக்கொன்ற அனுராக், மனைவியின் தலையில் சுத்தியலால் பலமாக தாக்கி கொலை செய்தார். குழந்தைகள் மூவரையும் கூரையின் மேல் இருந்து வீசி மொத்தமாக குடும்பத்தையே கொலை செய்தார்.
பிரேத பரிசோதனையில் சந்தேகம்
5 கொலைகளை செய்த அனுராஜ், தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், ஐவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வந்தது. இதனிடையே, தற்கொலை செய்ததாக கூறப்பட்ட அனுராக்கின் உடலில், சர்ச்சைக்குரிய வகையில் 2 துப்பாக்கி குண்டுகள் கண்டறியப்பட்டன.
சொத்து விவகாரத்தில் பயங்கரம்
இதனால் அவர் தற்கொலை செய்யவில்லை என்பதை உறுதிசெய்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அனுராக்கின் சகோதரர் அஜித் சிங்கின் மீது சந்தேகம் திரும்பியுள்ளது. அவரை பிடித்து விசாரணை செய்தபோது சொத்து விவகாரத்தில் சகோதரரின் குடும்பத்தையே காலி செய்தது தெரியவந்தது. இதற்கு எதிராக இருந்த அவரின் தாயும் கொல்லப்பட்டுள்ளார்.
விவசாயி - வங்கி பணியாளருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்
அனுராக் விவசாயம் செய்து வருமானம் பார்த்துவரும் நிலையில், பல ஏக்கர் நிலங்கள் சொத்துக்களாக இருந்துள்ளன. அதனை கவனித்து வந்துள்ளார். அவரின் மனைவி பிரியங்கா லக்னோவில் உள்ள வங்கியில் வேலை பார்த்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தாய்ப்பாசத்தால் கொலையாளியான 17 வயது மகன்.! தாயை கண்முன் அடித்த ரௌடியை நண்பருடன் சேர்த்து கொன்ற பயங்கரம்.!