மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#JustIN: கொரோனா திடீர் உச்சம்.. மாநிலம் தழுவிய இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு..!
அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, இரவு நேரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக ஹிமாச்சல பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த, மாநில அரசு கொரோனா பரவலுக்கேற்ப மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை அறிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில வாரமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அம்மாநில அரசு இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்த இரவு ஊரடங்கு மறுஉத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத வழிபாட்டுத்தலங்கள், அரசியல் கூட்டங்களில் 50 % நபர்கள் மட்டுமே அனுமதி செய்யப்பட வேண்டும் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. திருமணம் மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் 50 % நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.