டோரேமான் கார்ட்டூன் பார்த்து, கட்டிலுக்கு அடியில் ஒளிந்து தப்பித்த சிறுவன்.. கட்டிடம் இடிந்து விபத்திற்குள்ளான விவகாரத்தில் ஆச்சரியம்.!



Uttarpradesh Child Save Building Collapse Watching Doreman Cartoon Know how to react

 

என்னதான் சின்னத்திரைகளில் ஒளிபரப்பாகும் கார்டூன் நிகழ்ச்சிகளை நாம் விமர்சித்தாலும், அதில் நன்மை பயக்கும் தகவலை வைத்து காட்சிகள் அமைத்தால் அவை நல்வழிக்கே வழிவகை செய்யும்.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவில், அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் குடியிருப்பில் இருந்த 42 வயது பெண்மணி ஷபானா இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். 

14 பேர் கட்டிடத்தின் ஈடுகளில் சிக்கி உயிருக்கு அலறித்துடித்த நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர். 

இந்த 14 பேரில் 6 வயது சிறுவன் ஒருவனும் இருந்துள்ளார். அவர் கட்டிலுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டார். அவரிடம் அதிகாரிகள் எதற்காக கட்டிலுக்கு அடியில் சென்று இருந்தாய்? என கேள்வி எழுப்பினர். 

Uttar pradesh

அப்போது, சிறுவன் தான் எப்போதும் டோரேமான் கார்ட்டூன் பார்ப்பதாகவும், அதில் நிலநடுக்கம் தொடர்பான விஷயங்களில் கட்டிலுக்கு அடியில் ஒளிந்துகொள்ள வேண்டும் என்ற காட்சிகள் இருந்தது. அதேபோல நானும் ஒளிந்துகொண்டேன் என தெரிவித்துள்ளார். 

சின்னத்திரைகளில் ஒளிபரப்பு செய்யப்படும் கார்ட்டூன் சிறுவர்களை அதற்கு அடிமையாக்கினாலும், அவர்களுக்கு நல்ல விஷயங்களை கற்றுக்கொடுத்து எடுக்கப்படும் காட்சிகள் அவரின் உயிரை காப்பாற்றவும் வழிவகை செய்துள்ளது.