திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடக்கொடுமையே.. முத்தமிடுவதை தடுத்ததால் இளைஞரை கொன்ற காதல்ஜோடி..! அதிகரிக்கும் காதலர்களின் அட்டூழியங்கள்..!!
ஸ்கூட்டரில் முத்தமிடுவதை தடுத்து கண்டித்த வாலிபரை காதல்ஜோடி அடித்துக்கொன்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காஜியாபாத்தில் ஸ்கூட்டரில் காதல் ஜோடி முத்தமிட்டுக்கொண்டிருந்தது. இதைக் கண்ட விராட் என்ற இளைஞர், "அருகில் குடியிருப்பு பகுதிகள் இருக்கின்றன.
ஆபாசமாக நடந்து கொள்ள வேண்டாம்" என்று சமூகநலன் கருதி கூறியுள்ளார். ஆனால் இதனைகேட்டு கோபமடைந்த காதல்ஜோடி தங்களது நண்பர்களை செல்போன் மூலம் அழைத்துள்ளனர்.
மேலும் அவர்களுடன் சேர்ந்து விராட்டை கற்கள் மற்றும் கம்பால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் வலி தாங்க முடியாமல் விராட் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.