ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
கள்ளகாதலுக்காக 2 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை கங்கையில் வீசிய கொடூரம்..!
தனது கள்ளக்காதல் உறவே பெரிது என எண்ணிய பெண்மணி, தனது குழந்தைகளை கொலை செய்து உடலை ஆற்றில் வீசிய பயங்கரம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட், டெல்லி கேட் பகுதியில் வசித்து வருபவர் ஷாஷித். இவரின் மனைவி நிஷா. தம்பதிகளுக்கு மிராப் (வயது 10) என்ற மகனும், கைனன் (வயது 6) என்ற மகளும் இருக்கின்றனர்.
கடந்த புதன்கிழமை வீட்டிற்கு வெளியே இருந்த 2 குழந்தைகளும் காணவில்லை என நிஷா கூறியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் நிகழ்விடத்தில் இருந்த சி.சி.டி.வி-யை ஆய்வு செய்தபோது கடத்தல் அடையாளங்கள் இல்லை. இதனால் தம்பதியின் செல்போன் உரையாடலை சோதித்தார்.
அப்போது, நிஷாவுக்கும் - உள்ளூர் கவுன்சிலரான சவுத் பவுஜி என்பவருக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாக கள்ளக்காதல் பழக்கம் இருந்து வந்துள்ளது.
மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த சவுத் - நிஷாவின் கள்ளக்காதல் பின்னாளில் சேர்ந்து வாழும் அளவு இருந்துள்ளது. இதனால் நாம் தனியே வாழலாம் என நிஷா கூறியுள்ளார்.
இதனைக்கேட்ட சவுத்தோ நீ மட்டும் வா, குழந்தைகள் வேண்டாம் என கூறியுள்ளார். கள்ளக்காதல் மீது மோகம் கொண்ட நிஷா, இரண்டு குழந்தைகளை மயக்க ஊசி செலுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
குழந்தைகளின் சடலத்தை பெட்டியில் அடைத்து கங்கையின் கால்வாயில் வீசி இருக்கின்றனர். இந்த கொலைக்கு நிஷா, சவுக்கத் மட்டுமல்லாது அக்கம்பக்கத்தை சேர்ந்த 4 பேர் உடந்தையாக இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.