கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
ஏசி உதவியுடன் நல்ல உறக்கம்; குளிரில் நடுநடுங்கி பிறந்த ஒரேநாளில் உயிரிழந்த 2 பிஞ்சுகள்.. மருத்துவரின் அலட்சியத்தால் சோகம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாம்லி அரசு மருத்துவமனையில், சம்பவத்தன்று 2 பெற்றோர்களுக்கு 2 குழந்தைகள் சுகப்பிரசவத்தின் வாயிலாக பிரிந்துள்ளனர். இரண்டு பெண்களும் தங்களின் குழந்தைகளுடன் அன்றைய நாளின் இரவே தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அங்கு பெண்களுக்கு தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு உறங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். 2 குழந்தைகளும் மருத்துவ பணியாளர்களிடம் உடல் பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
அங்கு பணியில் இருந்த மருத்துவமனை உரிமையாளரான மருத்துவர் நீது (Dr.Neetu) என்பவர், நல்ல உறக்கம் வேண்டும் என்பதற்காக குழந்தைகள் இருந்த அறையில் ஏசியை அதிகமாக வைத்துவிட்டு அங்கேயே உறங்கியதாக தெரியவருகிறது.
மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, குளிர்நிலை தாங்காது குழந்தைகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சனிக்கிழமை குழந்தையை பெற்றெடுத்த பெண்கள் இருவரும், ஞாயிற்றுக்கிழமை தங்களின் குழந்தைகளை சடலமாக கண்டனர்.
இந்த தகவல் அறிந்து ஆத்திரமடைந்த குடும்பத்தினர், விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி மருத்துவர் நீதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.