திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கைக்கடிகாரம் ஆர்டர் செய்த பெண்ணுக்கு 4 மாட்டுச்சாண வறட்டி டெலிவரி.. பிளிப்கார்ட் "Big Billion Days" பரிதாபங்கள்.!
Big Billion Days க்கு வாட்ச் ஆர்டர் செய்த பெண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பொருளால் இந்திய அளவில் பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கௌஷம்பி மாவட்டத்தை சேர்ந்த பெண்மணி நீலம் யாதவ். இவர் கடந்த செப். 28ம் தேதி பிளிப்கார்ட் செயலியில் வழங்கப்பட்ட BigBillion Days மூலமாக குறைந்த விலையில் பொருட்கள் வாங்க திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, தனது சகோதரருக்கு கைக்கடிகாரம் வாங்கலாம் என ரூ.1,304 மதிப்புள்ள கடிகாரத்தை ஆர்டர் செய்துள்ளார். இவருக்கு கடந்த செப். 7ம் தேதி பார்சல் டெலிவரி செய்யப்பட்ட நிலையில், சில காரணங்களால் அதனை பிரித்து பார்க்காமல் வைத்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று குடும்பத்தினர் பார்சலை பிரித்து பார்த்தபோது, காண்போருக்கு பேரதிர்ச்சியாக கடிகாரத்திற்கு பதில் 4 சாண வறட்டி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ந்துபோன குடும்பத்தினர் பிளிப்கார்டிடம் முறையீடு செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆன்லைன் ஆர்டர் செய்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.