தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி..! எப்போதிலிருந்து தெரியுமா.?
உலகத்தையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி அடுத்தடுத்த அலைகளாக நீடித்து வந்தது. இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டிற்கு மேலாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், தற்போது பரிணாம வளர்ச்சியை அடைந்து ஓமிக்ரான் வைரஸாக உருப்பெற்றுள்ளது.
இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் 18-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகின்றன.
அதேபோல் 12-வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஜைடஸ் கடிலா நிறுவனத்தின் சைகோவ் - டி தடுப்பூசிக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் 12-வயதுக்கு கீழான சிறுவர்களுக்கான தடுப்பூசிக்கு இந்தியாவில் இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், இந்தியாவில் இன்னும் 6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு போடும் வகையிலான கொரோனா தடுப்பூசி (கோவேவக்ஸ்) தயாராகும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.