தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
மீண்டும் ஒரு பேரதிர்ச்சி, கவலைக்கிடமாக உள்ள முக்கிய அரசியல் பிரபலம்.!
திமுக தலைவர் கருணாநிதியை போலவே இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். சிறுநீரக தொற்றினால் பாதிக்கப்பட்டு உடல்நிலை நலிவடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
இந்தியாவின் பத்தாவது பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாய் 1998 - 2004ம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமராக பணியாற்றினார். மேலும், இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பின், காங்கிரஸ் கட்சியை சேராமல் பிரதமராக ஐந்தாண்டு ஆட்சியை நிறைவு செய்தவர் என்ற பெருமைக்குரியவர் அடல் பிகாரி வாஜ்பாய்.
94 வயதாகும் வாஜ்பாய் தனது முதுமையின் காரணமாக அரசியல் பயணத்தில் இருந்து ஓய்வு பெற்று, தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார்.
மேலும் மூட்டுவலி பிரச்சனையினால் அவதிப்பட்டு வந்த வாஜ்பாய்க்கு கடந்த இருபது ஆண்டுகளில் 10 முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் சிறுநீரக தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.மேலும் தற்பொழுது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் வாஜ்பாயை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
திமுக தலைவர் கருணாநிதி இறந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில், முன்னாள் பிரதமரான வாஜ்பாய் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.