கவலைக்கிடமான நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - எய்ம்ஸ் மருத்துவமனை



vajpayee in serious condition aims

முன்னாள் பிரதமரும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் (வயது 93) முதுமை மற்றும் உடல்நல குறைவின் காரணமாக டெல்லியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டதாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் கடந்த ஜூன் மாதம் 11-ந் தேதி அங்குள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக ஆஸ்பத்திரியில் (எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்டார்.

vajpayee

கடந்த சில நாட்களாக வாஜ்பாயின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் மோடி நேற்று மாலை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று வாஜ்பாயை பார்த்தார். அவரது உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வருவார்கள்.

vajpayee

இந்நிலையில், வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, வாஜ்பாய் உடல் நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். சுமார் 15 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்த துணை ஜனாதிபதி அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.