#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வேலூர்: 16 வயது சிறுமி 6 மாத கர்ப்பம்; விசாரணைக்கு பயந்து 23 வயது காதலன் தற்கொலை.!
வேலூர் மாவட்டத்தில் உள்ள பேர்ணாம்பட்டு, கள்ளிச்சேரி பகுதியில் வசித்து வருபவர் தீனா (வயது 23). இதே பகுதியில் 16 வயதுடைய மாணவி, அங்குள்ள பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார்.
மாணவியிடம் பழக்கத்தை ஏற்படுத்திய தீனா, ஒருகட்டத்தில் காதலிப்பதாக கூறி தன்வசப்படுத்தி இருக்கிறார். அவரிடம் ஆசைவார்த்தை கூறி அத்துமீறியதாகவும் தெரியவருகிறது.
இதனால் மாணவி 6 மாத கர்ப்பமான நிலையில், விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனால் பெற்றோர் ஊர் பஞ்சாயத்தை கூட்டி நியாயம் கேட்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: திருமணம் ஆகாமலேயே கர்ப்பமான மகள்; உண்மையை அறிந்து தாய் விபரீதம்.. பறிபோன உயிர்.!
ஊர் பெரியவர்கள் தீணாவை அழைத்து நேற்று விசாரித்த நிலையில், இவ்விசயம் குறித்து காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்திடுவார்கள் என பயந்துபோனவர், நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: போதை பழக்கத்தை உறவினர்கள் கண்டித்ததால் சோகம்; விஷம் குடித்து பலி.!