பெண்ணுடன் தனிமையில் பூஜை என்று பாலியல் அத்துமீறல் முயற்சி.. வைரலாகும் பகீர் வீடியோ.. அதிர்ச்சியில் மக்கள்.!



Video Trend Fake Preacher Sexual harassed Woman Awareness Video

தனியொருவரின் நம்பிக்கையை எந்த அளவுக்கு தனக்கு சாதகமாக்குகிறார்கள் என்பதற்கு உதாரணமாக பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளன. இதில், இல்லாத தோஷத்தை கழிக்கிறேன் என்று கூறி சிறுமிகள் முதல் இளம்பெண்கள் வரை பூஜை செய்வதாக நடித்து போலிச்சாமியார் நிகழ்த்திய பாலியல் வன்முறைகள் ஏராளம். 

இதுகுறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்பட்டு இருந்தாலும், மக்களிடம் உள்ள அறியாமையை உபயோகம் செய்யும் போலிகள் பணத்தை வாங்கி ஏமாற்றுவது ஒருபுறம், பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது மற்றொருபுறம் என இருந்து வருகிறது. 

Trending Video

இந்த நிலையில், சமூக வலைத்தளமான முகநூலில் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில், சாமியார் பூஜை செய்வது போல நடித்து பெண்ணை தன்வசப்படுத்துகிறார். பெண்ணும் சாமியாரின் உரத்த குரலில் மதிமயங்கி செயல்பட, ஒருகட்டத்தில் போலிச்சாமியார் என்ற காமுகன் தனது சுயரூபத்தை வெளிப்படுத்துகிறான். 

நல்ல வேலையாக பெண்ணின் உறவினர் ஒருவர் வீட்டிற்குள் வந்துவிடவே பெண் தப்பித்துவிடுகிறார். இதுகுறித்த வீடியோ விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்டது என்ற பெயரில் வைரலாகி வந்தாலும், இதுபோன்ற நிகழ்வுகள் உண்மைத்தன்மை கொண்டது என்பதால் சுதாரித்து செயல்படுவது நல்லது.

இந்த வீடியோ விழிப்புணர்வுக்கானது மட்டுமே. பொதுநலன் கருதி வீடியோ இணைக்கப்படவில்லை.