#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய் மல்லையா, நீரவ் மோடி,மெகுல் சோக்சியின் முடக்கப்பட்ட சொத்துக்கள் பொதுத்துறை வங்கிகளின் பெயருக்கு மாற்றம்.!
இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் வரையில் கடன் வாங்கி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. அயல்நாட்டுக்கு தப்பிச் சென்ற அவரை நாடு கடத்தி அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகினற்ன.
இதேபோல் வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரும் பல வங்கிகளில் பணம் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர்.
வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டிற்கு தப்பி சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடி,மெகுல் சோக்சி ஆகியோருக்கு சொந்தமாக ரூ.9,371 கோடி சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இந்தநிலையில், விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சியின் முடக்கப்பட்ட சொத்துக்கள் பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.