வங்கிகளுக்கு டிமிக்கி கொடுத்து தப்பியோடிய தொழிலதிபர்கள்.! பறிமுதல் செய்யப்பட்ட பல்லாயிரம் கோடிக்கான சொத்துக்கள்.!



Vijay Mallya property seized

பிரபல தொழில் அதிபர்களான விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் பொதுத்துறை வங்கிகளில் பல்லாயிரம் கோடி மோசடி செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி விட்டனர். அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வந்து, வழக்குகளை சந்திக்க வைப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்தநிலையில், பொதுத்துறை வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சியிடம் இருந்து சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் 3 பேரும் பொதுத்துறை வங்கிகளை ஏமாற்றி, தங்கள் நிறுவனங்கள்மூலம் நிதி மோசடி செய்து, ரூ.22 ஆயிரத்து 585 கோடியே 83 லட்சம் இழப்பினை ஏற்படுத்தி உள்ளனர். கடந்த 15-ந் தேதி நிலவரப்படி, இவர்களது ரூ.19 ஆயிரத்து 111 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள், சட்ட விரோத பணபரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டு பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.