மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலியை கண்டித்த பெண் மருத்துவரை கத்தியால் சரமாரியாக குத்திய வார்டு பாய்.. பதறவைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியீடு.!
தனது காதலியை கடிந்துகொண்ட மருத்துவரை வார்டுபாய் கொலை செய்ய முயற்சித்த பயங்கரம் அதிரவைத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக், கங்காபூர் சாலையில் நிம்ஸ் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் சோனல் தரடே பெண் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று சரிவர பணியாற்றாத வார்டு பாய் மற்றும் அவரின் காதலியை பெண் மருத்துவர் கண்டித்ததாக தெரியவருகிறது. இதனால் மருத்துவரின் மீது ஆத்திரமடைந்த வார்டு பாய், கத்தரிக்கோலை எடுத்து கழுத்து, வயிற்றில் திடீரென சரமாரியாக குத்தியுள்ளார்.
WATCH: #BNNIndia Reports.
— Gurbaksh Singh Chahal (@gchahal) December 29, 2022
Following a minor argument, a ward boy at NIMS Hospital on Gangapur Road in Maharashtra's Nashik stabbed a 30-year-old woman resident medical officer with scissors. #India #Maharashtra #Crime pic.twitter.com/qz9DE3n4aM
இதனால் மருத்துவர் நிலைகுலைந்துபோன நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்படுகிறது. இக்குற்றச்செயலில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.