#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அங்கங்களை தொட்டு., ஆபாசமாக பேசி 5 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.! பெண்கள் விடுதியில் அதிர்ச்சி.!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் மாவட்டம் பிலாகி பகுதியில் பெண்கள் விடுதியானது செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் வார்டனாக பணியாற்றி வந்த நபர், கடந்த மூன்று மாதங்களாக மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் நடந்துள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் முதலில் பொறுத்த நிலையில், பின் இது குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் காவல்நிலையத்தில் புகாரளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நான்கு முதல் ஐந்து பெண்களிடம் உடல் அங்கங்களை தொட்டு ஆபாசமாக பேசி பாலியல் தொல்லையளித்ததும் தெரியவந்துள்ளது. காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் முன்னதாகவே வார்டனை பெற்றோர்கள் எச்சரித்திருந்த நிலையில், அவரின் நடவடிக்கையில் மாற்றம் இல்லாததால் புகார் அளிக்கப்பட்டுள்ளது.