திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிகானர் - கவுகாத்தி அதிவிரைவு இரயில் தடம்புரண்ட விபத்து.. 9 பேர் பரிதாப பலி..!
மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள ஜல்பைக்குறி மாவட்டத்தில், பிகானர் - கவுகாத்தி (15633) அதிவிரைவு இரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. இரயிலில் இருந்த 12 பெட்டிகள் தடம்புரண்டு விபத்திற்குள்ளான நிலையில், 3 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 45 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.5 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும் என இரயில்வே அறிவித்துள்ள நிலையில், காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 இலட்சம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்திற்கு இந்திய பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தற்போது வரை விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.