#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மேற்கு வங்க பாஜக எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம்; சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு வந்தவருக்கு சோகம்.! கட்சியினர் கண்ணீர் அஞ்சலி.!
மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள ஜல்பைகுரி மாவட்டம், துப்புகுரி சட்டப்பேரவை உறுப்பினர் பிஷ்ணு படா ராய். இவர் அம்மாநிலத்தில் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருந்த மிட்டலி ராயை தோற்கடித்து வெற்றி அடைந்தார்.
அம்மாநிலத்தில் தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் திங்கள் கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக பிஷ்ணு ராய் கொல்கத்தாவுக்கு வருகை தந்திருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்படவே, உடனடியாக மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மருத்துவர்கள் பிஷ்ணு ராய்க்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, இன்று அவர் இயற்கை எய்தினார். இவரின் மறைவை உறுதி செய்துள்ள அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.
பிஷ்ணு ராயின் உடல் முதலில் அம்மாநில பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, பின் அவரின் இல்லத்திற்கு எடுத்து செல்லப்படவுள்ளது. பிஷ்ணு ராயின் மறைவு அம்மாநில பாஜக தொண்டர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.