மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரீல்ஸ் மோகம்; 8 மாத கைக்குழந்தையை விற்பனை செய்து ஐபோன் வாங்கிய தம்பதி: பெற்றோரின் நெஞ்சை பதறவைக்கும் செயல்.!
மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தா, பரகன்ஸ் பகுதியை சேர்ந்த தம்பதி ஜெயதேவ் - சாதி. இவர்கள் இருவருக்கும் 7 வயதுடைய மகள் இருக்கும் நிலையில், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் ரீலிஸ் போட்டு பிரபலமான தம்பதி இவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தம்பதிகளுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில், 8 மாத கைக்குழந்தை மற்றும் 7 வயது மகளுடன் வசித்து வந்துள்ளனர். தம்பதிகளுக்கு ஆப்பிள் ஐ-போன் வாங்கி ரீலிஸ் வீடியோ பதிவிட வேண்டும் என ஆசை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பணத்திற்கு என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கிய தம்பதி, தங்களின் 8 மாத குழந்தையை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. தம்பதிகள் தங்களின் குழந்தையை பிரியங்கா கஹோஷ் என்ற பெண்மணியிடம் விற்பனை செய்ததாக தெரியவருகிறது.
தங்களின் 7 வயது மகளிடமும் குழந்தை குறித்து யாரும் கேட்டால் பதில் சொல்லக்கூடாது என பிள்ளையை மிரட்டி வைத்துள்ளனர். குழந்தை இல்லாமல் தம்பதிகள் பல இடங்களுக்கு சென்று ரீலிஸ் வீடியோ எடுத்து பதிவிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், தம்பதிகளின் பச்சிளம் குழந்தை மாயமாகிய தகவல் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகத்தை எழுப்ப, அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் உண்மை அம்பலமாகியுள்ளது.
விசாரணைக்கு பின்னர் குழந்தையை விற்பனை செய்த தம்பதி மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட பிரியங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.