மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை... துர்கா சிலை கரைப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட சோகம்...
மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி அருகே மால்பஜார் என்ற பகுதியில் துர்க்கை சிலை கரைப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு விமர்சையாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது. அப்போது துர்க்கை சிலையை எடுத்து கொண்டு மால் ஆற்றில் கரைக்க சென்ற போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதில் வெள்ளத்தில் சிலைகளை எடுத்துச் சென்ற 3 பக்தர்கள் உட்பட 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் பலர் நீரில் அடித்து செல்லப்பட்டு மாயமாகினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்த பகுதியில் நேற்று முதல் மிக மோசமான நிலை நிலவி வந்த நிலையில் மழை விடாமல் பெய்து வந்துள்ளது. இதன் காரணமாக மால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.