மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
படுக்கைக்கு நான் நீ.. குடும்பம் நடத்த இல்லை - கள்ளக்காதலனின் செயலால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை.. அனாதையான பிஞ்சுகள்.!
மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தா, ஹரிடேவ்ப்பூர் பகுதியில் மனைவியை பிரிந்து தனியே வசித்து வருபவர் சுபிர் பிஸ்வாஸ். இதே பகுதியில் கணவரை இழந்த இளம்பெண் தனது குழந்தையுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் தனிமையில் சந்திக்க வைத்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர் எப்போதும் பெண்ணின் வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
ஆனால், அவர் பெண்மணியை ஒருபோதும் மனைவி என்ற எண்ணத்தில் வைக்காத நிலையில், பெண்மணி இருவரும் திருமணம் செய்து ஒன்றாக வாழலாம் என பலமுறை வேண்டுகோள் வைத்தும் பலனில்லை. சம்பவத்தன்று பெண் தனது குழந்தைகளுடன் துணையின் வீட்டிற்குள் செல்ல முற்பட்டுள்ளார்.
அப்போது, அவரை தடுத்து நிறுத்தியவர், அங்கிருந்து செல்லாத பட்சத்தில் தனிமையில் எடுத்துக்கொண்ட போட்டோ, விடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வேன் என மிரட்டி இருக்கிறார்.
இதனால் மனதளவில் உடைந்துபோன பெண்மணி, தனது வீட்டில் இருந்து மண்ணெணெய் எடுத்து வந்து கள்ளகாதலரின் வீட்டு முன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
பலத்த தீக்காயத்துடன் அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. சுபீருக்கு வலைவீசப்பட்டுள்ளது.
தனக்கு நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டது என இடையில் வந்தவனை கண்மூடித்தனமாக நம்பி தனது அன்பை காண்பித்த இளம்பெண், இறுதியில் குழந்தைகளை அனாதையாக விட்டுவிட்டு தற்கொலை செய்த துயரம் அப்பகுதி மக்களை கலங்கவைத்துள்ளது.