மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளக்காதலனுடன் சேர்ந்து மாஸ்டர் பிளான்.... கணவனைப் கொன்று புதைத்த வழக்கில் மனைவி உட்பட 4 பேர் கைது.!
கர்நாடக மாநிலத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று புதைத்த வழக்கில் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் பெலகாவி அம்பேத் நகர் பகுதியில் வசித்து வந்தவர்கள் ரமேஷ் மற்றும் சந்தியா தம்பதியினர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் தனது கணவர் மாயமானதாக சந்தியா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வந்தனர். அப்போது சந்தியாவின் நடவடிக்கைகளில் அவர்களுக்கு சந்தேகம் இருந்து வந்தது.
இதனைத் தொடர்ந்து சந்தியாவிடம் கடுமையாக விசாரணை செய்ததில் தனது கணவர் ரமேஷை கள்ளக்காதலன் பாலு உடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். சந்தியாவிற்கும் ரமேஷின் நண்பரான பாலு என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த விஷயம் ரமேஷ் எப்படி தெரிய வரவே அவர் கண்டித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரை கொலை செய்ய திட்டம் தீட்டிய கள்ளக்காதல் ஜோடி அவருக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து களத்தை நெறித்துக் கொண்டுள்ளது.
பின்னர் அவரது உடலை கோவா மாநில எல்லையில் உள்ள மலைப்பகுதியில் புதைத்திருக்கிறது. இந்த உண்மைகளை சந்தியா காவல்துறையிடம் வாக்குமூலமாக அளித்தார். இதனைத் தொடர்ந்து சந்தியா அவரது கள்ளக்காதலன் பாலு மற்றும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் காவல்துறையினர் புதைக்கப்பட்ட ரமேஷின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.