திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அம்மா.. அப்பா ஊருக்கு வாறாரா!. தந்தை இறந்தது கூட தெரியாமல் தாயிடம் கேட்கும் மகன்!. கண்ணீர் விட்டு அழும் தாய்!.
சவுதி அரேபியாவில் இந்தியர் ஒருவர் 10 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் சடலத்தை பெறமுடியாமல் இந்தியாவில் உள்ள குடும்பத்தார் தவித்து வருகிறார்கள்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் இர்பான் என்பவருக்கு, நர்கீஸ் என்ற மனைவியும் 5 வயதில் சோகில் என்ற மகனும் இருக்கின்றனர்.
இர்பான் குடும்ப வறுமை காரணமாக இரு மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் 11-ஆம் தேதி மின்சாரம் தாக்கி இர்பான் சவுதி அரேபியாவிலே உயிரிழந்துள்ளார்.
அவர் இறந்து பத்து நாட்கள் ஆகியும் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வரமுடியாமல் அவரது குடும்பம் மற்றும் நர்கீஸ் 5 வயது மகனுடன் தவித்து வருகிறார்கள். இதுபற்றி நர்கீஸ் கூறுகையில், தன்னுடைய அப்பா இறந்துவிட்டதை கூட உணரமுடியாமல், அம்மா அப்பா இப்போ நம்ம ஊருக்கு வருகிறாரா என கேட்கிறான் என்று கண்ணீர் மல்க கூறுகிறார் .