தாலிகட்டி மூன்று வருடம் குடும்பம் நடத்திய கணவனை காதலியுடன் சேர்த்துவைத்த மனைவி! வினோத சம்பவம்



Wife divorced husband and helped him to marry her lover

தாலிகட்டி மூன்று வருடம் தன்னுடன் குடும்பம் நடத்திய கணவனை மனைவி அவரது காதலியுடன் சேர்த்துவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தில்தான் இந்த வினோதமான நிகழ்வு நடந்துள்ளது. மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகியநிலையில் தனது கணவர் வேறொரு பெண்ணை காதலிப்பதை தெரிந்துகொண்டார்.

இதனால் தனது கணவரின் ஆசையை நிறைவேற்றி வைப்பதற்காக தனது கணவரை விவாகரத்து செய்ததோடு, அவரே இருவரையும் சேர்த்தும் வைத்து திருமணமும் செய்துவைத்துள்ளார். இந்த சமப்வம் குறித்து பேசிய அந்த பெண்ணின் வழக்கறிஞர் கூறும்போது, அந்த பெண்ணின் கணவர் முதலில் விவாகரத்து பெறாமலேயே தனது காதலியை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டதாகவும், ஆனால் அதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்பதால் அவரது மனைவியே அவரை விவாகரத்து செய்துவிட்டு அவரது காதலை நிறைவேற்றி வைத்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த வினோதமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.