மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவரை காக்க ஹைனாவை பொட்டுத்தள்ளிய பாசக்கார மனைவி.!
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சார்ந்த தம்பதி நந்து - சுக்னி. சம்பவத்தன்று தம்பதிகள் இருவரும் அங்குள்ள வயல்வெளி பகுதியில் இருந்தபோது கழுதைப்புலி வந்ததாக தெரியவருகிறது.
இவர்கள் வசித்து வரும் பகுதி வனத்தை ஒட்டிய ஊர் என்பதால் அங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் சாதாரணமாகவே இருக்கும். இந்நிலையில் கழுதைப்புலி ஒன்று நந்துவை தாக்க வரவே, அவர் பயந்து கூச்சலிட்டுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ந்த சுக்னி துரிதமாக செயல்பட்டு தனது கணவரை காக்க கழுதைப் புலியின் தலையில் அடித்து விரட்டி இருக்கிறார். இந்த சம்பவத்தில் கழுதைப்புலி ஒன்று உயிரிழந்த நிலையில், மற்றொரு கழுதைப்புலியால் தாக்கப்பட்ட நந்து படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.