மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யாரிடமும் சொல்லாமல் மறைத்த சிறுமி.. அவரின் மனைவி செய்த செயலால் அதிர்ச்சி...!
உத்தரபிரதேச மாநிலம் பாடன் மாவட்டம் பைசல்கஞ்ச் பெக்டா பகுதியில் உள்ள கிராமத்தை வசித்து வரும் சிறுமி ஒருவர், அதே பகுதியை சேர்ந்த தெரிந்தவர், வீட்டிற்கு கடந்த 12- ஆம் தேதி சென்றுள்ளார். அந்த வீட்டில் அந்த வீட்டில் கணவன், மனைவி இருந்துள்ளனர். அந்த வீட்டிற்கு சென்ற சிறுமியை, அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அப்போது தனது கணவன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வதை அவரின் மனைவி வீடியோ எடுத்துள்ளார். பிறகு அந்த சிறுமியிடம், இதுபற்றி யாரிடமாவது கூறினால் வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுவிடுவோம் என மிரட்டியுள்ளனர். மிரட்டலுக்கு பயந்து தனக்கு நடந்த இந்த கொடுமையை பற்றி அந்த சிறுமி யாரிடமும் சொல்ல வில்லை. இந்நிலையில், அந்த வீடியோவை அந்த பெண் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது சமூகவலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி அவரின் பெற்றோருடன் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரையும் அதை வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட அந்த நபரின் மனைவியையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபர், அவரது மனைவியின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.