#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
போலீஸ்காரருடன் தலைமறைவாகிய மனைவி... ஆத்திரத்தில் மாமியார், பாட்டி படுகொலை.!! கணவன் வெறி செயல்.!!
சிவகங்கை மாவட்டத்தில் தனது மனைவி கள்ளக்காதலுடன் ஓடியதால் ஆத்திரமடைந்த கணவன், மாமியார் மற்றும் மனைவியின் பாட்டியை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தப்பி ஓடிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.
மது போதையில் தகராறு
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி(38). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டி லட்சுமி(52) என்பவரது மகள் சுகன்யாவிற்கும்(35) கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு 1 மகள் மற்றும் 2 மகன்கள் என 3 குழந்தைகள் உள்ளனர். லோடுமேன் வேலை செய்யும் பசுபதி அடிக்கடி சாராயம் குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை துன்புறுத்தி இருக்கிறார். இதன் காரணமாக அவரது மனைவி சுகன்யா அடிக்கடி அம்மா வீட்டிற்கு கோபித்துக் கொண்டு சென்றுள்ளார்.
போலீஸ்காரருடன் கள்ளக்காதல்
தாய் வீட்டிற்கு சென்ற சுகன்யாவிற்கு போலீஸ்காரருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியிருக்கிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்ற சுகன்யா தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு போலீஸ்காரருடன் தலைமறைவாகிவிட்டார். இதனையறிந்த பசுபதி தனது மனைவி மீது கடும் கோபத்தில் இருந்திருக்கிறார்.
இதையும் படிங்க: திருச்சி காவல்துறை அதிரடி... 600 போதை மாத்திரைகள் பறிமுதல்.!! 3 இளைஞர்கள் கைது.!!
மாமியார் மற்றும் பாட்டி கொடூர கொலை
இந்நிலையில் நேற்று மாலை தனது மனைவியின் வீட்டிற்கு வந்த பசுபதி, சுகன்யா எங்கே சென்று இருக்கிறார் என மாமியாரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் தெரியாது என பதிலளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பசுபதி தனது மாமியார் பாண்டி லட்சுமி மற்றும் பாண்டி லட்சுமியின் தாயாரான சொர்ணவல்லி என்பவரையும் சரா மாறியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த நபர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய பசுபதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருச்சியில் பயங்கரம்... 3,000 ரூபாய்க்காக கொடூரமாக கொலை செய்யப்பட்ட மூதாட்டி... இளைஞர் வெறி செயல்.!!