திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விசில் அடிச்சு கூப்பிட்டா கோவப்படுவீங்களா.?.. இந்தியாவில் ஒரு கிராமத்தில் அப்படித்தான் கூப்பிடுறாங்க...!
மேகாலயாவில் உள்ள கோங்தாங் என்ற கிராமத்தில் உள்ள மக்களுக்கு பெயரே கிடையாது என்றால் ஆச்சரியமாக உள்ளதா...
இந்த கிராமத்தில் உள்ள மக்களை அழைக்க வேண்டும் என்றால் விசிலால் எழுப்பும் ஒலி மூலம் அழைக்கப்படுவதாக கூறுகின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தனிப்பட்ட விசில் ஓசைகளை வைத்து அழைக்கின்றனர்.
மேகாலயா தலைநகர் சில்லாங்கிலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் உள்ள கோங்தாங் கிராமத்தில் சுமார் 600 பேர் வசித்து வருகின்றனர்.
இங்கு வசிப்பவர்கள் பெயர்கள் விசில் ஒளியை கொண்டுள்ளதால், இந்த கிராமம் விசில் கிராமம் அல்லது பாடும் கிராமம் என்று கூறுகின்றனர். இந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு இரண்டு விதமான ஓசை பதிப்புகள் பெயர்களாக உள்ளன. ஒன்று நீளமாகவும் மற்றொன்று குறுகியதாகவும் உள்ளது.
குழந்தை பிறக்கும் போது நீண்ட ஓசையாக வைக்கப்படும் பெயர், வீட்டில் குறுகியதாக அழைக்கப்படுகிறது. குழந்தை பிறப்பதற்கு முன்னரே, குலப்பெண்ணின் பாடல் என்ற பொருள் மரபின்படி, தாய், தனது குழந்தைக்காக ஒரு டியூனை தயார் செய்கிறார்.
குழந்தை பிறந்தவுடன் அதனுடைய காதுகளில் தாய் இந்த இசையை பாடினால் அது உடனே குழந்தையின் பெயராக சூட்டப்படுகிறது. இந்த ட்யூனை வேறு எந்த குழந்தைக்கும் வைக்க முடியாது அது அந்த குழந்தைக்கு மட்டும் சொந்தமாகும். எனவே புதிய ட்யூன்களை உருவாக்குகின்றனர்.
இந்த தனித்துவமான பெயர்களை தாய்மார்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு வைக்க முடியும். இவர்களுக்கு தனியா குடும்ப பெயர்கள் உள்ளன. தனிப்பட்ட டியூனோடு அதையும் இணைத்துக் கொள்கின்றனர்.
அதேபோல் காட்டுக்குள் இருக்கும்போது தங்களுக்குள் பேசுவதற்கு இசை மொழிகளை பயன்படுத்துகின்றனர். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஏதோ விசில் அடித்துக் கொண்டு செல்வது போல் நான் தோன்றும் ஆனால் அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு செல்வார்கள்.