மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடுக்கிடும் சம்பவம்... தாய், மகன் கொடூரக் கொலை... சந்தேகத்தின் பெயரில் கணவர் கைது.!
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் தனியாக தங்கி வேலை செய்து வந்த இளம் பெண் மற்றும் அவரது மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அவரது கணவரை காவல்துறை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை செய்து வருகிறது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நவநீதா என்ற பெண்ணிற்கும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சந்துரு என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு எட்டு வயதில் ஸ்ருஜன் என்ற மகன் இருந்தான். நவநீதா பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சந்துருவும், நவநீதாவும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். நவநீதா தனது மகன் ஸ்ருஜனுடன் தனி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அவரது கணவர் சந்துருவும், நவநீதாவின் வீட்டிற்கு அருகிலேயே வாடகை வீட்டில் குடியேறினார். மேலும் அடிக்கடி மது குடித்துவிட்டு நவநீதாவின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று நவநீதாவின் வீட்டில் எந்தவித நடமாட்டமும் தென்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நவநீதாவின் வீட்டில் கதவை உடைத்து சென்று பார்த்தபோது நவநீதாவும் அவரது மகன் ஸ்ருஜனும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரது உடலையும் கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து அவரது கணவர் சந்துருவை சந்தேகத்தின் பெயரில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.