மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"கடவுளே.! என் மாமியார் சீக்கிரம்..." - 50 ரூபாய் நோட்டில் எமனுக்கு ரிக்வெஸ்ட் செய்த மருமகள்.!
மாமியார் மருமகள் சண்டை என்பது எல்லா வீட்டிலும் வழக்கமாக நடக்கும் ஒன்று. ஆனால் மாமியார் இறக்க வேண்டும் என ரூபாய் நோட்டில் எழுதி அதனை கோவில் உண்டியலில் போட்ட விசித்திரமான சம்பவம் கர்நாடக மாநிலம் கலபுராகி மாவட்டத்தில் நடைபெற்றிருக்கிறது.
கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தும் பணத்தில் தங்கள் மனதில் உள்ள விருப்பங்களையும் ஆசைகளையும் எழுதி அந்த ரூபாய் நோட்டுக்களை கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். பொதுவாக தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் தங்கள் காதல் வெற்றி பெற வேண்டும் விரைவாக திருமணம் நடைபெற வேண்டும் நோய் குணமாக வேண்டும். இது போன்ற வேண்டுதல்களை ரூபாய் நோட்டுகளில் எழுதி கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழமையான ஒன்று.
ஆனால் கர்நாடக மாநிலம் கல்புராகி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மாமியார் மரணம் அடைய வேண்டும் என 50 ரூபாய் நோட்டில் எழுதி அதனை கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருக்கிறார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது கல்புராகி மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் உண்டியல் காசுகளை என்னும் போது "எனது மாமியார் சீக்கிரம் சாக வேண்டும் கடவுளே" என்று எழுதப்பட்ட வாசகத்துடன் ரூ.50 நோட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது எந்த கோவிலில் கண்டெடுக்கப்பட்டது என்பது பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இணையதளத்தில் இந்த ரூபாய் நோட்டுகள் கங்காபூர் தத்தாத்ரேயர் கோவில் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்தன எனினும் கோவில் நிர்வாகி தத்து நிம்பெர்கி தங்களது கோவிலில் இருந்து எடுக்கப்படவில்லை என தெளிவுபடுத்தி இருக்கிறார். இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் வெவ்வேறு விதமான கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். சிலர் யாரேனும் விளையாட்டுக்காக எழுதி கோவில் உண்டியலில் போட்டிருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.